Thursday, August 27, 2009

புதிய நீதிக் கதை (வடிவேலு கோபித்துக்கொள்ளக் கூடாது)

அமெரிக்க உணவு விடுதி ஒன்றில் வெள்ளைக்காரன் ஒருவன் பத்தாவது மாடியில் அமர்ந்து வடை சாப்பிட்டுக் கொண்டிருந்தான். ஒரு முழு வடையை மும்முரமாக சாப்பிட்டு முடித்தவன் அடுத்த வடைக்கு வரும்போது அந்நேரம் அவசரமாக உள்ளே வந்த ஒருவன் “பீட்டர் உனது மனைவியும் உனது மகளும் ஒரு மோசமான கார் விபத்தில் சற்று நேரத்திற்கு முன்பு இறந்து போய்விட்டார்கள்” என்று அலறினான்.

வடை சாப்பிட்டு கொண்டிருந்தவனுக்கு ஒரு நிமிடம் என்ன செய்வது என்று தெரியவில்லை. திடீரென்று மாடியிலிருந்து ஜன்னல் வழியே கீழே குதித்து விட்டான். கீழே விழுபவனுக்கு இரண்டு மாடி தாண்டியதும்தான் அவனுக்கு மகள் இல்லை என்பது நினைவுக்கு வந்தது. ஐந்து மாடி தாண்டியதும் அவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது நினைவுக்கு வந்தது. இன்னும் சில விநாடிகளில் தான் தரையில் மோதி சாகப்போகிறோம் என்னும்போதுதான் அவனுக்கு மிக முக்கியமாக மண்டையில் உரைத்தது தான் பீட்டரே இல்லை என்பது.....

கதையின் முக்கிய நீதி: வடை போச்சே…..

3 comments:

  1. அலுவலகத்தில் ஆணி புடுங்கற வேலை இல்லியா? அதுவும் விழாயக்கிழாமை! .....
    ஏன் எந்த மொக்கை பதிவு ! இதனால் சொல்ல வரும் கருத்து என்ன? முடில சாமி !

    ReplyDelete
  2. இந்த கதைக்கும் வடிவேலுவுக்கும் என்ன சம்பந்தம் ? அமெரிக்க மேலும் அமெரிக்கம் மக்கள் மேலும் மற்றும் வடை மேலும் உனக்கு அப்படி என்ன ஒரு கோபம் ?

    ReplyDelete
  3. நீ அனுப்பிச்ச ஒரு நாளைக்கு ஒரு பதிவேனும் போடுவதெப்படி படிச்சிட்டு டைம் செட் பண்ணி ரிலீஸ் பண்ண பதிவு இது..........

    இதுக்கு மேல இதுமாதிரி நிறைய வரும்

    ReplyDelete

வருகைதந்து வாசித்தமைக்கு நன்றி. தங்களின் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன.