Sunday, September 27, 2009

பொய் சொன்னால் தண்டிக்கும் ரோபோ (வாங்குமுன் ஒருமுறை யோசிக்கவும்)


சமீபத்தில் இணையத்தில் படித்த குஷ்வந்த்சிங் ஜோக் இது.

தன் மகனை திருத்த எத்தனையோ முயற்சிகள் எடுத்த பார்த்த அவரது அப்பா கடைசியில் நண்பரின் ரோபோவை வீட்டுக்கு கொண்டு வந்தார். யாராவது பொய் சொன்னால் பளாரென்று கன்னத்தில் அடிக்கும் ரோபோ அது.

வெளியே சென்று பின்னிரவில் வீட்டுக்கு வந்த மகனிடம் “எங்கடா போய்ட்டு வர்ற” என்றார் அப்பா. “ஸ்பெஷல் கிளாஸ் போய்ட்டு வர்றேன்ப்பா” என்று சொன்ன பையனை பளாரென்று கன்னத்தில் அறைந்தது ரோபோ. “ஸாரிப்பா... ப்ரெண்ட் கூட சினிமா போயிருந்தேன்” என்று பையன் உண்மை சொன்னதும் விலகி நின்றது ரோபோ.

உடனே தன் மனைவியிடம் “பாரு… பாரு… இந்த வயசுல எப்படி பொய் பேசுறான்னு... எல்லாம் நீ குடுக்குற செல்லம்.... இவன் வயசுல எனக்கு பொய்னா என்னன்னே தெரியாது” என்று அப்பா சொல்லியதும் பளாரென்று அறை வாங்கினார் ரோபோவிடம்.

அவர் மனைவி சலித்துக்கொண்டே “சரி.. சரி.. விடுங்க... உங்களுக்கு பிறந்த பையன்தானே... வேற எப்பிடி இருப்பான்” என்று கூற, ரோபோ அவளையும் பளாரென்று அறைந்தது.

2 comments:

  1. இதனால் தங்கள் உலகுக்கு கூர விரும்பும் கருத்து?

    ReplyDelete
  2. Ye dho yenala mudinja COPY /PASTE

    "“கால் நனையாமல் ஆற்றைக் கடக்க முடியாது. கண்கள் நனையாமல் வாழ்வைக் கடக்க முடியாது” அந்தத் தத்துவ ஞானி பேசிக்கொண்டிருந்தார்.

    கூட்டத்திலிருந்து கொட்டாவியோடு ஒரு குரல்,

    “படுக்கையை நனைக்காமல் பெரியவானாக முடியாது” என்றது.

    ReplyDelete

வருகைதந்து வாசித்தமைக்கு நன்றி. தங்களின் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன.