Saturday, January 16, 2010

காக்கா குளியல்



சமீபத்தில் சென்னைக்கு வேலை விஷயமாக சென்றிருந்தபோது, போன வேலை சீக்கிரம் முடிந்துவிடவே அப்படியே மெரினாவுக்கு ஒரு ரவுண்டு போனேன். ஆற்றில் கொட்டினாலும் அளந்து கொட்ட வேண்டுமென்பார்கள். கரன்சியை கிரானைட்களாக மாற்றி இறைத்திருக்கிறார்கள். ஆனாலும் நாளிதழ்களில் வெளிவந்த அளவிற்கு செலவு செய்திருப்பார்களா என்பது சந்தேகமாகவே இருந்தது. (இப்பொழுதே நிறைய டைல்ஸ்கள், கிரானைட் கற்கள் விரிசல் விட்டு, முனை உடைந்து காணப்பட்டதால் இந்த வசனம்)

ஏற்கனவே பலமுறை பார்த்த வீட்டை உள் அலங்காரத்தில் நிறைய மாற்றம் செய்யப்பட்ட பிறகு பார்க்கும்போது ஒரு பிரமிப்பு வரும். அப்படி ஏதும் இல்லை. புற்களுக்கு தண்ணீர் பாய்ச்ச அமைத்திருந்த தானியங்கி கருவி ஒன்று பழுதடைந்துவிட்டதால் சுற்றிலும் தண்ணீர் பீய்ச்சாமல் கண்ணகி சிலை அருகே சாலையை ஒட்டிய நடைபாதையில் பேருந்தைப்பிடிக்க நடந்தவர்களை குளிப்பாட்டிக் கொண்டிருந்தது. (அடியேன் அங்கே ஓரமாக தூங்கிக் கொண்டிருந்த புல் வெட்டுபவரிடம் விஷயத்தை சொன்னதும் சமர்த்தாக அதை மட்டும் அணைத்து விட்டார்.

அதன்பின்னர் அதிகபட்சமாக கவர்ந்த ஒரு அம்சம் காக்கை குளியல். தேங்கி நின்ற தண்ணீரில் கூட்டமாக சில காக்கைகள் குளியல் போட அப்போது கிளிக்கியவை உங்கள் பார்வைக்கு.... அதிலும் பாருங்கள் ஒரு காக்கை போட்டோ எடுக்கும்போதே பறந்துவிட்டது (அனேகமாக பெண் காக்கையாக இருக்குமோ என்னவோ....?)

1 comment:

  1. தனியா மெரினா பீச்சுக்கு எல்லாம் போகாத ! காலம் கேட்டு கெடக்குது! நீ வேற வெள்ளையா வேற இருக்க! ஜாகிரதை!

    ReplyDelete

வருகைதந்து வாசித்தமைக்கு நன்றி. தங்களின் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன.