Saturday, February 6, 2010

ஏங்க நான் கேட்டது தப்பாங்க.... நீங்களே சொல்லுங்க....

யதார்த்தமா ஒரு விஷயம் பேசுனாக்கூட நாட்டுல தப்பாயிடுதுங்க... அட சம்பந்தப்பட்டவங்ககிட்டதான அந்த விஷயத்த பத்தி கேக்கமுடியும்....நான் ஏதோ குருட்டு தைரியத்துல கேட்டுட்டேன்.., ஆனா எத்தன பேரு இது மண்டைல இது தோணி கேட்டா ஏதாவது தப்பாயிடுமோன்னு பயந்து சுத்திட்டுருக்கானுங்களோ..?

ஆமா இல்லைன்னு பதில் சொல்லியிருந்தாக்கூட மனசு நிம்மதியா இருந்திருக்கும்... ஆனா ஒண்ணுமே சொல்லாம விட்டுட்டா எப்படிங்க.... (மனசாட்சி: டேய்.... பில்டப்பு போதும் மூடினு விஷயத்துக்கு வா)

அட அது வேற ஒண்ணுமில்லீங்க.... மூணு வாரம் முன்னாடி நம்ம பய ஒருத்தன் நம்மகிட்ட வந்து “மச்சான் வாடா ஒரு நல்ல செக்லாஜிஸ்ட்டை பாத்துட்டு வரலாமின்னு கூப்பிட்டான்....” அவனுக்கு கல்யாணமாகி மூணு வருஷமா குழந்தை இல்லீங்க... தனியா போக ஒரு மாதிரி கூச்சமா இருக்கு வாடான்னு நம்மள கூப்பிடாங்க... (பயபுள்ள என்னையும் ஒரு மனுஷனா மதிச்சு நல்லவன்னு நம்பி….!!!ஒருத்தன் கூப்பிட்டு அப்புறம் போகலைன்னா தெய்வ குத்தம் ஆகிடாது....)

சரி வாடான்னு அவன்கூட போனேங்க... டாக்டரும் எங்களுக்கு குடுத்திருந்த அப்பாயின்மென்ட் டயத்துக்கு கரெக்டா எங்கள உள்ற கூப்பிட்டாரு.... (பாரின்ல படிச்சிருப்பாரு போல...அதான் “இண்டியன் பங்க்சுவாலிட்டி” தெரியல...) ரொம்ப பிரெண்ட்லியா பேரு ஊரு எல்லாம் என் பிரெண்ட்டுகிட்ட விசாரிச்சவரு “இவரு கூட இருக்காரே உங்க மெடிக்கல் டீடெயில் பத்தி பேசுனா பரவால்லியான்னு” என்னிய காட்டி என் பிரெண்டுகிட்ட கேக்க அவனும் “இருக்கட்டும் டாக்டர் நான்தான் கூட்டிவந்தேன்”னான்.

அவரு ரொம்ப ஜோவியலா நம்ம பயகிட்ட பலான பொஷிஸன்ஸ் பத்தியும் எதெதுல எவ்வளவு நேரம் இருக்கணும், பார்ட்னருக்கு எது புடிச்சுருக்குன்னு தெரிஞ்சுக்கணும்னு சீரியஸா பேச ஆரம்பிக்க, நான் “டாக்டர் எனக்கு ஒரு சந்தேகம்” அப்டின்னு ஆரம்பிச்சேன்... நம்ம பய இதுக்குதாண்டா உன்னிய கூட்டி வந்தேன்னு மனசுக்குள்ள நினைச்சிருப்பான்போல... மைண்ட்வாய்ஸ் கேட்டுது... டாக்டரும் “ம்ம்ம்...தாராளமா கேளுங்க”ன்னாருங்க....

நான் மெதுவா அது ஒண்ணுமில்லீங்க டாக்டர் ... பொதுவா இந்த ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட்டுங்க, ஈஎன்டி ஸ்பெஷலிஸ்ட்டுங்க, ஆர்த்தோ ஸ்பெஷலிஸ்ட்டுங்க இவங்க எல்லாம் அவங்க டிபார்ட்மென்ட் சம்பந்தப்பட்ட “ஹியூமன் பாடி” பார்ட்ஸ அவங்க டேபிள் மேல கட்டைல இல்லன்னா பீங்கான்ல செஞ்சத வைச்சுருப்பாங்க.... உங்க டேபிள்ல அதுமாதிரி எதுவுமே இல்லாம நீட்டா க்ளீனா இருக்கே....அப்டீனு கேட்டேங்க.... அவ்ளோதான்...., என் பிரெண்ட் என்ன நினைச்சானோ குபீர்னு சிரிச்சுட்டான்.... டாக்டருக்கு கண்ணெல்லாம் செவந்து போயி ரொம்ப கோவமா என்னிய பாத்தாரு... நான் நைஸா சிரிச்சு ஒருமாதிரியா சமாளிச்சு வெளியே வந்துட்டேன்.... ஏங்க நான் யதார்த்தமா கேட்ட ஒரு விஷயத்துக்கு அந்த பக்கிபய சிரிச்சா அது என் தப்பாங்க... நான் ஏதாவது பலான விஷயத்தைபத்தி எசகுபிசகா கேட்டு அவரு கோச்சிக்கிட்டாலும் ஒரு நியாயமிருக்கு..... அட சம்பந்தப்பட்டவங்க கிட்டதானங்க ஒரு விஷயத்த பத்தி டீடெயிலா கேக்கமுடியும்.... நான் கேட்டது தப்பாங்க.... நீங்களே சொல்லுங்க....

No comments:

Post a Comment

வருகைதந்து வாசித்தமைக்கு நன்றி. தங்களின் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன.