Sunday, March 14, 2010

சச்சின் டெண்டுல்கர் – மாஸ்டர் பிளாஸ்டரை பற்றிய சில புள்ளிவிவரங்கள்

இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேனான சச்சின் டெண்டுல்கர் மீது அவரது சமீபத்திய சாதனையான இரட்டை சதத்தின் தொடர்ச்சியாக மீண்டும் ஒருமுறை புகழ் வெளிச்சம் பாய்ச்சப்பட்டது. அனைத்து ஊடகங்களும் அவரது முந்தைய சாதனைகள், அவர் முறியடித்த சாதனைகள், அவர் இதுவரை அடித்துக் குவித்த ரன்கள் எனப் பலப்பல விஷயங்களை பரபரப்பாக ஒளிபரப்பி அவரைப் பற்றிய செய்திகளை கொட்டிக் கொடுத்தனர். இவற்றுக்கிடையே இந்த இமாலய சாதனையைப் பற்றி துளிகூட அலட்டிக்கொள்ளாமல் இந்த வெற்றியை, இரட்டை சதம் அடித்த மகிழ்ச்சியை அவர் நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது. 1973-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி மும்பையில் எல்லாரையும் போல ஒரு சாதாரண மனிதனாக பிறந்த சச்சின் டெண்டுல்கர் இதுவரை செய்துள்ளது எல்லாமே கிரிக்கெட் உலகில் அசாதாரண சாதனைகள். இந்தியர்களின் சராசரியான 5 அடி 5 அங்குல உயரமே உள்ள இவர் கிரிக்கெட் உலகில் இன்று தொட்டுள்ள உயரங்கள் யாராலும் அத்தனை எளிதாக அடைய முடியாதது. பதின் பருவங்களில் ஆச்ரேகரிடம் கிரிக்கெட் பயின்று, இன்று கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்திருக்கும் இவரிடம் உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்களே ஏதேனும் கற்றுக் கொள்ள துடிக்கின்றனர். சச்சினால் மகா திறமைசாலி என்று வர்ணிக்கப்பட்ட லாராவே அவரது சமீபத்திய இரட்டை சத சாதனையின்போது அளித்த பேட்டியில் “எனக்கு ஒரு மகன் இருந்திருந்தால் அவனை சச்சினைப் போல் சிறந்த பேட்ஸ்மேனாக ஆக்கியிருப்பேன். சச்சினுக்கு விருப்பமிருந்தால் அவரிடமே அவனை பயிற்சியெடுக்கவும் அனுப்பிவைப்பேன்” என்று கூறியுள்ளதை வைத்து தெரிந்துகொள்ளலாம் இவரின் நிஜமான விளையாட்டுத் திறமையை.


தேவையில்லாத அரசியல் சர்ச்சைகளில் அவரை அறியாமலே சிக்கிக்கொண்டாலும் அவற்றையெல்லாம் விளையாட்டு மைதானத்தில் இறங்கி பேட்டை தொட்டவுடன் மறந்துவிட்டு முதல் மேட்ச் ஆடும் வீரரைப்போல மனக்குவிப்புடன் ஆடுகின்ற இவரது மனக்குவிப்புத்திறன் குறித்து பல சந்தர்ப்பங்களில் இவருடன் ஆடியிருப்பவர்களும் இவரது முந்தைய கோச்சுகளும் கூறியுள்ளதை இங்கே நாம் நினைவுபடுத்தி பார்க்கவேண்டும். இவர் 200 ரன்கள் அடித்தது ஒரு சாதனையென்றால் அதைப்பற்றி அன்றைய தினம் உலகம் முழுவதும் டிவிட்டரில் அதிகம்பேர் பகிர்ந்துகொண்டது இன்னொரு சாதனையாக விளங்குகிறது. (உத்தேசமாக 13 கோடிபேர் இதைப்பற்றி டிவிட்டி இருக்கிறார்கள் என்கிறது ஒரு இணையதளம்.) நடிகர் விவேக் ஓபராய் அனைத்திற்கும் உச்சம் வைப்பதைப்போல “கிரிக்கெட் என்று ஒரு மதமிருந்தால் சந்தேகமில்லாமல் அதன் கடவுள் சச்சின்தான்” என்று வர்ணித்துள்ளார்.

20 வருடங்களாக விளையாடிவருகிறார், உடல் தகுதியை இழந்துவிட்டார் என்றெல்லாம் ஊடகங்கள் அவ்வப்போது இவரை காரசாரமாக விமர்சித்து எழுதினாலும் அவர்களின் பேனா முனைகளை சத்தமில்லாமல் இன்னொரு சாதனை செய்து முறியடித்துவிடுவது இவரது விளையாட்டு தாண்டிய இன்னொரு திறமை. இவர் ஒருமுறை போட்டியில் சொதப்பியபோது SACHIN “END”ULKAR என்று தலைப்பிட்டு இவரின் சகாப்தம் முடிந்துவிட்டது, சிங்கத்திற்கு வயதாகிவிட்டது என்றெல்லாம் வர்ணித்து ஒரு முன்னணி பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. அதை படித்த சச்சின் தன் கிரிக்கெட் வாழ்க்கையில் தான் சந்தித்த மிக மோசமான மற்றும் தனக்கு மிகவும் மனக்கசப்பு ஏற்படுத்திய செய்தியிது என்று வருத்தம் தெரிவித்திருந்தார். இதுவரை அப்படியொரு செய்தி வெளியிட்டதற்காக அந்த இதழ் மன்னிப்பு கேட்டதாக தெரியவில்லை.

சச்சின் டெண்டுல்கர் பற்றிய செய்திகள் இணையத்தில் ஆயிரக்கணக்கில் கொட்டிக்கிடந்தாலும் அவை எல்லாம் ஒரு தகவல் சிதறல்களாக எனக்குத் தோன்றியது. கொஞ்சம் அவற்றைத் திரட்டி, குறிப்பாக அவரது ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் பற்றிய விவரங்கள் மற்றும் அவர் இதுவரை போட்டிவாரியாக பெற்ற விருதுகள் என அனைத்தையும் தொகுத்து ஒரே இடத்தில் கிரிக்கெட் பிரியர்களுக்கு பந்தி வைக்கலாமே என்று தோன்றியது. இதற்காக ரொம்பவே மெனக்கெட்டேன் என்று சொல்லிக்கொண்டாலும் இது போதுமானதாக இருக்கிறதா என்பதை அறிய, இதை வாசிக்கிற, கிரிக்கெட்டையே சுவாசிக்கிற அன்பர்களின் கருத்துக்களை எதிர்நோக்குகிறேன்.

சச்சின் ஆடிய ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் பற்றிய அட்டவணை

சச்சின் ஆடிய டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் பற்றிய அட்டவணை


சச்சின் பெற்ற “மேன் ஆஃப் தி மேட்ச்” விருதுகள் பற்றிய அட்டவணை

இருபது வருட கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் எடுத்துள்ள ரன்கள் பற்றிய புள்ளிவிவரம்



அரை சதமோ, சதமோ அடித்து முடித்தபின்பு அவர் ரசிகர்களை பார்ப்பதும்.... வானத்தைப் பார்ப்பதும்....


2010-ல் அவர் நடத்திய இரட்டை சதம் (200) சாதனையை குறிக்கும் படம்


மேடம் டுஸ்ஸாட்டின் மெழுகு சிலை காட்சியகத்தில் தன் சிலையுடன் மனைவி அஞ்சலி, மகள் சாரா மற்றும் மகன் அர்ஜூன்.

No comments:

Post a Comment

வருகைதந்து வாசித்தமைக்கு நன்றி. தங்களின் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன.