Friday, January 8, 2010

தவளையின் காலை வெட்டியவன்

புது வருடத்தின் ஆரம்பத்தில் வழக்கம் போல சில உறுதிகள் எடுத்துக்கொண்டேன். தேவையில்லாமல் யாருக்கும் போன் செய்வதில்லை, கண்ட குறுஞ்செய்திகளை முன்னிடுவதில்லை, வெட்டி ஆராய்ச்சிகள் செய்வதில்லை இன்ன பிற, இன்ன பிற....

அவற்றில் கடைசியானது பத்து நாட்களுக்குள்ளாக செத்து விடும் என்று எண்ணவில்லை. என்றுமில்லாத அதிசயமாக வீட்டை ஒழித்து கொஞ்சம் சுத்தப்படுத்தலாமே என்று பழைய டைரிகள், கையேடுகளை அடுக்கி வைக்கும்போது ஒரு வெட்டி ஆராய்ச்சி காகிதம் கிடைத்தது. கண்டிப்பாக இதை சென்ற ஆண்டின் ஏதோ ஒரு இற்றுப்போன ஞாயிற்றுக்கிழமையின் மத்தியானத்தில் எழுதியிருப்பேன். எவனும் சினிமாவுக்கு அழைப்பு விடுக்காமல், துணி துவைக்கிற வேலையில்லாமல், மின்சாரமும் தடைப்பட்டு டி.வி. பார்க்க கதியற்ற வேளையில் இந்த ஆராய்ச்சி நடந்திருக்கக்கூடும். கசக்கி குப்பையில் போடலாமென எண்ணியபோது இதை அப்படியே பிளாக்கலாமே என்று தோன்றியது.

· ஆங்கில மாதங்கள் ஜனவரி முதல் டிசம்பர் வரை மொத்தம் 74 எழுத்துக்களை கொண்டுள்ளது.

· மொத்தம் 26 எழுத்துக்களில் ஒருமுறை கூட இடம்பெறாதவை என்கிற பெருமையை K-Q-W-X-Z ஆகிய ஐந்து எழுத்துக்கள் கொண்டுள்ளது.

· 1,2,5,7 ஆகிய மாதங்கள் Y எழுத்திலும் 9,10,11,12 R எழுத்திலும் முடிகிறது.

· மற்ற அனைத்தும் குறைந்தது ஒருமுறை முதல் அதிகபட்சம் 11 முறை வரை இடம்பெற்றுள்ளன.

· D-F-G-H-I-V-ஆகிய எழுத்துக்கள் தலா ஒருமுறையும், L-P-S-இருமுறையும் இடம் பெற்றுள்ளன. இவ்வாறே C-J-N-O-T-மூன்றுமுறை, Y-நான்குமுறை, B-M-ஐந்துமுறை, U-ஆறுமுறை, A-ஏழுமுறை, R-ஒன்பதுமுறை, மற்றும் E-பதினோருமுறையும் இடம் பெற்றுள்ளன.

· அதிகபட்சம் 11 இடங்களை ஆக்கிரமித்துள்ள E-யில் எந்த மாதமும் தொடங்காதது ஆச்சரியம்.

· 16-ம் நூற்றாண்டின் மத்தியில் நவீன ஆங்கிலம் திருத்தியமைக்கப்பட்டபோது கடைசியாக வந்து ஒட்டிக்கொண்ட எழுத்து J. அதில் மூன்று மாதங்கள் ஆரம்பிப்பது மற்றுமொரு ஆச்சரியம். (அதற்கு முன்புவரை ஆங்கிலத்தில் 24 எழுத்துக்கள்தான். மேலும் தகவல்களுக்கு www.wikipedia.org-ஐ சொடுக்குங்கள்)

· ஏழு மாதங்கள் 31 நாட்களோடும் நான்கு மாதங்கள் 30 நாட்களோடும் லீப் ஆண்டு தவிர்த்து பிப்ரவரி 28 நாட்களையும் கொண்டுள்ளது.

· பொதுவாக முஷ்டி மடக்கி மேடான பகுதிகளை 31 நாட்கள் கொண்ட மாதங்களாக கருதுவது வழக்கம். இதை இன்னும் சுலபமாக ஞாபகத்தில் வைத்துக்கொள்ளலாம். ஆண்டின் முதல் மாதம் தொடங்கி ஒற்றைப்படை எண் கொண்ட நான்கு மாதங்களும், எட்டாம் மாதம் முதல் அடுத்து வரும் அனைத்து இரட்டைப்படை மாதங்களும் 31 நாட்களை கொண்டவை.

ஆண்டின் முதல் பதிவை வெட்டிப் பதிவாக்கியிருக்கிறேன்... இது முழுவதும் வெட்டியா, சிறிதளவேனும் உருப்படியாக உள்ளதா என்பதை பின்னூட்டுங்கள்.

2 comments:

  1. I don't understand what is the relation between heading of the post and content of the post? If you take this post as "knowledge is power, Information is Asset", well its worth ! Mudila ! Mudila! Mudila! eduku mela type panna Enalla mudila..

    ReplyDelete

வருகைதந்து வாசித்தமைக்கு நன்றி. தங்களின் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன.